பாலத்தின் தடுப்பு சுவர் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததை சீரமைக்காததால் விபத்து அபாயம் உள்ளது. சென்னை-கும்பகோணம் சாலையில் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாலத்தை கடந்து சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலுார், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்களும், கனரக வாகனங்களும் செல்கின்றன. வெள்ளாற்று பாலம் அருகில் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் கடந்தாண்டு அரசு பஸ் விரைவு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுப்பு சுவரை சீரமைக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். குறிப்பாக, பாலம் அகலம் குறைவு என்பதால் கனரக வாகனங்கள் செல்லும்போது ஒதுங்கி செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.