உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மீது நடவடிக்கை கோரி குழந்தைகளுடன் மனைவி தர்ணா

கணவர் மீது நடவடிக்கை கோரி குழந்தைகளுடன் மனைவி தர்ணா

திட்டக்குடி,: கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், வேப்பூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ரெபேக்கா ஜான்சி, 32. இருவருக்கும் திருமணமாகி 2 மற்றும் 3 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர்.தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ரெபேக்கா ஜான்சி, கடந்த 2ம் தேதி திட்டக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.அவர், நேற்று மாலை 6:00 மணியளவில், விருத்தாசலம் - ராமநத்தம் சாலையில், திட்டக்குடி பஸ் நிலையம் அருகே தனது குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திட்டக்குடி போலீசார் சமாதானம் செய்து, ரெபேக்கா ஜான்சியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவத்தால், விருத்தாசலம் - ராமநத்தம் சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி