உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மகள் மாயம் :தந்தை புகார்

 மகள் மாயம் :தந்தை புகார்

வடலூர்: மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார். வடலுார், ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கார்த்திகா, 21; தனியார் மருத்துவமனை ஊழியர். இவர் நேற்று முன்தினம் தனது தந்தையுடன் வடலுார் நான்கு முனை சந்திப்பு பகுதியில் உள்ள வளையல் கடைக்கு சென்றார். மகளை கடையில் விட்ட ராஜேந்திரன் மீண்டும் சென்று பார்த்த போது, அவர் மாயமானது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இதையடுத்து மகள் மாயமானது குறித்து ராஜேந்திரன் வடலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ