முதியவருக்கு கொலை மிரட்டல்
நடுவீரப்பட்டு : முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.நடுவீரப்பட்டு கீழ் செட்டி தெருவை சேர்ந்தவர் பரமசிவம், 75; அதே பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ், 51; பரமசிவம் வீட்டில் உள்ள மா மரத்திலிருந்து அருள்பிரகாஷ் தாய் விஜயா மாங்காய் பறித்தார். இதனை பரமசிவம் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திர மடைந்த அருள்பிரகாஷ், பரமசிவத்தை ஆபாசமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் அருள்பிரகாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.