மேலும் செய்திகள்
மாநகராட்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
20-Nov-2024
விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில், விருத்தாசலம் செராமிக் சிட்கோ நிர்வாக முறைகேட்டை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்ததிற்கு, மா. கம்யூ., லெனினிஸ்ட் மாநில செயலர் கந்தசாமி தலைமை தாங்கினார். சிட்கோ அசோசியேஷன் செயலர் ஆனந்தகோபால், பொருளாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் விடுதலை குமரன் கலந்து பேசினார். மாவட்ட செயலர் ராஜசேகரன், துணை பொதுச் செயலர் ராமர், டி.டி.யு.சி., மாநில தலைவர் ராஜேந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள், சிட்கோ அசோசியேஷன் பொருப்பாளர்கள் பங்கேற்றனர். இதில், விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள கில்லனை, சிட்கோ நிறுவனம் கிளஸ்டர் என்ற பெயரில் 10 பேருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
20-Nov-2024