மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் : சிதம்பரத்தில் மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிதம்பரம் காந்தி சிலை அருகே மா.கம்யூ., கட்சி சார்பில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு,நகர் மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜா, நகர் குழு உறுப்பினர்கள் செல்வம், சதீஷ், அஷ்ரப் அலி, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், கற்பூரம் ஏற்றியும் நுாதன ஆர்ப்பாட்டம் நடத்தி, மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.