உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி: பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அ.தி.மு.க., கூட்டணி கட்சி சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கனகராஜ், பா.ம.க., மாவட்ட செயலாளர் ரவிசந்திரன், பா.ஜ., மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, த.மா.க. மாவட்ட தலைவர் ராமலிங்கம், புரட்சிபாரதம் விக்கிபாரதம் சிறப்புரையாற்றினர். இதில் அவை தலைவர் ராஜதுரை, முன்னாள் எம்.எல்.சி., சிவராமன், ஜெ.,பேரவை நகர செயலாளர் செல்வம், எம்.ஜி.ஆர்.,மன்றம் பாலு, டாக்டர் கவுரிசங்கர், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் சக்திவேல், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், ராமசாமி, சிவா, நாகபூஷணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை