மேலும் செய்திகள்
ஓசூரில் டெங்கு ஒழிப்பு சிறப்பு துாய்மை பணி
30-Sep-2026
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு சிறப்பு முகாம் நடந்தது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் டெங்கு கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டெங்கு பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்து வருகின்றனர். ஒவ்வொரு புதன்கிழமையும் சிறப்பு முகாம் நடத்துகின்றனர்.நேற்று நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் துப்புரவு ஆய்வாளர் கேசவன் முன்னிலையில் தூய்மை பணி நடந்தது. டெங்கு மற்றும் தூய்மை பணியாளர்கள் அங்குள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தனர். பள்ளி,அரசு அலுவலக வளாகங்களில் தேங்கியிருந்த குப்பைகள் முழுவதையும் அகற்றி பிளிச்சிங் பவுடர் தெளித்தனர்.
30-Sep-2026