துணை முதல்வர் உதயநிதிக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., வரவேற்பு
கடலுார்; கடலுாருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தந்த துணை முதல்வர் உதயநிதிக்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழக துணை முதல்வர் உதயநிதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சி நிர்வாகிகள் கூட்டம், வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க கடலுாருக்கு நேற்று வருகை தந்தார்.முன்னதாக, அவருக்கு வரவேற்பு அளிக்க கடலுார் சட்டசபை தொகுதி சார்பில் அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமையிலும், டாக்டர் பிரவீன் அய்யப்பன் முன்னிலையிலும் ஆயிரக்கணக்கானோர் கலெக்டர் அலுவலகம் அருகில் திரண்டனர்.பின், ஆல்பேட்டை சோதனைச்சாவடி வரையில், ஊர்வலமாக சென்றனர். புதுச்சேரியில் இருந்து கடலுார் வந்த துணை முதல்வர் உதயநிதிக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., சால்வை மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார்.