மலையாண்டவர் கோவில் சாலை பழுதால் பக்தர்கள் அவதி
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலின் சாலை பழுதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு கரிநாள் திருவிழா நடந்தது.இந்த கோவிலின் மலைபாதையில் ஜல்லிகள் பெயர்ந்து நடக்க முடியாத நிலையில் உள்ளது.இதை தினமலர் நாளிதழில் பல முறை சுட்டி காட்டியும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக சாலை சரி செய்யாமல் உள்ளது. கடந்த ஆண்டு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒருவருடமாக அதற்கான நடவடிக்கை எடுக்காமல் சாலை போடாமல் உள்ளது.இதனால் திருவிழாவிற்கு வந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.வயதானவர்கள் காலில் கற்கள் குத்தி நடக்க முடியாமல் பாதி வழியிலேயே திரும்பி சென்றனர். ஆகையால் உடனடியாக இந்த கோவில் மலை பாதையை தரமான சாலை போட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.