தருமபுரம் ஆதீனம் தரிசனம்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி கிராமத்தில் வேத நாராயண பெருமாள் சசேத கமலவள்ளி தாயார் கோவில் கும்பாபிேஷகம் இன்று (13ம் தேதியும்) பாலாம்பிகை சமேத வானவகோடீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நாளை 14ம் தேதியும் நடக்கிறது. இரு கோவில்களிலும் யாக சாலை பூஜைகள் நடந்து வருகிறது. தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீகயிலை மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார், பிறந்த ஊரான வளையமாதேவியில் நேற்று வேத நாராயண பெருமாள் கோவில் யாக சாலை பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, வானவ கோடீஸ்வரர் கோவில் யாக சாலை பூஜையில் சுவாமி தரிசனம் செய்தார்.