மேலும் செய்திகள்
கணவர் மாயம் மனைவி புகார்
20-Oct-2024
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவி-கொடுக்கன்பாளையம் தார்சாலை குண்டும்,குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு அடுத்த சேர்க்காம்பாளைம், வானமாதேவி காலனி,பரிசமங்கலம், பெத்தாங்குப்பம், கட்டாரச்சாவடி, மலையடிக்குப்பம் வழியாக கொடுக்கன்பாளையம் செல்லும் தார்சாலை உள்ளது.இந்த சாலை வழியாக தான் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பண்ருட்டி, நெல்லிக்குப்பம்,கடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக பல இடங்களில் குண்டும்,குழியுமாகவும்,ஜல்லிகள் பெயர்ந்துள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் இந்த சாலை வழியாக கரும்பு ஏற்றி செல்லும் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.ஆகையால் கடலுார் ஒன்றிய அதிகாரிகள் இந்த சாலையை புதியதாக போட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Oct-2024