சிதம்பரம் நகராட்சி பள்ளியில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
சிதம்பரம்; சிதம்பரம் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்-பட்டம்' இதழை நகராட்சி சேர்மன் செந்தில் குமார் வழங்கினார். மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பொது அறிவியல் தகவல்கள் மாணவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட துவக்கப் பள்ளி, நடுநிலை மற்றும் மேல்நிலை என, 12 பள்ளிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில், பட்டம் இதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் மாலைகட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் அப்பு சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். ஆசிரியை அகிலா வரவேற்றார். சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார், மாணவ, மாணவிகளுக்கு பட்டம் இதழை வழங்கி 'நல்ல முறையில் படித்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும்' என அறிவுரை கூறினார். ஆசிரியர்கள் லதா, தென்றல், ரேவதி, கலைஞானி, கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் பாலசுப்ரமணியன், இளங்கோவன், அன்பு, துரை ஆகியோர் பங்கேற் றனர்.