உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜெயப்பிரியா பப்ளிக் சீனியர் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

ஜெயப்பிரியா பப்ளிக் சீனியர் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

மந்தாரக்குப்பம்; நெய்வேலி ஜெயப்பிரியா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் புதுச்சேரி 'தினமலர் - பட்டம் ' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்திய மெகா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.புதுச்சேரி 'தினமலர் - பட்டம் இதழ், ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நெய்வேலி ஜெயப்பிரியா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் நேற்று நடந்த வினாடி வினா போட்டியில், 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதி சுற்று நடந்தது. போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி குழும இயக்குநர் திணேஷ் தலைமை தாங்கினார். போட்டியின் இறுதியில் எட்டாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் அஸ்மாஐன், முகமது ஷஃபி அணி முதலிடமும், பதினொன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மாணவர்கள் தமிழ்அரசன், திஷாந்த், அணி இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜெயப்பிரியா பள்ளி கல்வி குழும தாளாளர் ஜெய்சங்கர் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற இரு அணிகளும் மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ