உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தினமலர் நீட் மாதிரி தேர்வில் பெற்றோருடன் கலந்தாய்வு

தினமலர் நீட் மாதிரி தேர்வில் பெற்றோருடன் கலந்தாய்வு

விருத்தாசலம் : விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் நடந்த 'தினமலர்' நீட் மாதிரி தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் பெற்றோருடன் கலந்தாய்வு நடந்தது.'தினமலர்' நாளிதழ், ஜெயப்பிரியா வித்யாலயா இணைந்து 'நீட்' மாதிரி தேர்வு, விருத்தாசலத்தில், சேலம் புறவழிச்சாலையில் உள்ள ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நேற்று நடந்தது. விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பின், ஜெயப்பிரியா கன்வென்ஷன் ஹாலில், ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக்குழுமம் சார்பில் மாணவர்களின் பெற்றோருடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கல்விக்குழும இயக்குனர் தினேஷ் துவக்கி வைத்தார். முதல்வர் நித்யா வாழ்த்தி பேசினார்.அலன் கேரியர் இன்ஸ்டிடியூட் அதிகாரி ஆயுஷ் சிங், மார்க்கெட்டிங் மேலாளர் ஜிதேந்தர் ஆகியோர் அலன் இன்ஸ்டிடியூட் செயல்பாடுகள் மற்றும் உயர்கல்வியில் மாணவர்களுக்கான வாய்ப்புகள், வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை