மேலும் செய்திகள்
75 ஆண்டுகளாக தொடரும் சமுதாய பணி
06-Sep-2025
கடலுார்: மக்கள் பிரச்னையில் தினமலரின் பங்கு மகத்தானது என, ஆனையம்பேட்டை ராமபவன் ஓட்டல் உரிமையாளர் கணேஷ் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 'தினமலர்' நாளிதழ் சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே 'தினமலர்' உண்மைச்செய்தியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. செய்திகளோடு நிறுத்திக்கொள்ளாமல் மக்கள் பிரச்னைகளை தம் பிரச்னையாக எடுத்து என்றென்றும் துணை நிற்கக்கூடிய தினமலரின் கொள்கை மகத்தானது. உண்மையின் உரைகல் என்ற வாசகத்திற்கிணங்க சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் தினமலரின் வளர்ச்சி மென்மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
06-Sep-2025