உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், தேசிய ஊனமுற்றோர் உரிமைகளுக்கான மேடை ஆகியன சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை இல்லாமல் செய்து வறுமையில் தள்ளும் மத்திய அரசின் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கோஷமிட்டனர். விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் பகுதிகளை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை