மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கடலுார்: கடலுார் பஸ் நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் வசந்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ராசய்யன், அப்துல் ஹமீது முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ஆளவந்தார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரவி, ஜெயலட்சுமி, சிவகாமி, பாவாடைசாமி, பார்த்தீபன், ஜெயபால், சண்முகம், மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழக அரசின் வெற்றி பயணத் திட்ட பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களுக்கு அரசு அறிவித்த சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.