உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பேரிடர் மேலாண்மை திட்ட பயிற்சி முகாம்

 பேரிடர் மேலாண்மை திட்ட பயிற்சி முகாம்

சிதம்பரம்: சிதம்பரத்தில், பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கான பயிற்சி முகாம்நடந்தது. கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் பவுன்டேஷேன் சார்பில், கடலுார், நாகப்பட்டினம் மாவட்டத்தில், 100 கிராமங்களில் பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யபட்டுள்ளது. இத்திட்டத்தில், பேரிடர் அபாயகுறைப்பு, தயார்நிலை, மீட்பு நடவடிக்கை குறித்து, கிராம இளைஞர்கள், இளம்பெண்கள் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சிதம்பரம், கிரீடு தொண்டு நிறுவனத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு நிறுவன தலைவர் நடனசபாபதி தலைமை தாங்கினார். கிரீடு திட்ட இயக்குனர் நீலகண்டன் வரவேற்றார். ரிலையன்ஸ் பவுன்டேஷேன் திட்ட அலுவலர் அருனிமா பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். திட்ட மேலாளர் முகமது காதர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை