மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம்
22-Oct-2024
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் நாள் கூட்டத்தில், 15 பயனாளிகளுக்கு 9.3 லட்சம் ரூபாய் மதிப்பில் மானியத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்திற்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 462 மனுக்கள் பெறப்பட்டன.மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில், ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் 15 பயனாளிகளுக்கு 9.3௦ லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மானியத்திற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாவட்ட தாட்கோ மேலாளர் லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
22-Oct-2024