உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 16ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

16ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம்அருகே பழமையான கோயிலில், 16ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுஉள்ளது.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சோழர்கால சிவலோகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், சிதைந்த நிலையில் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் பேராசிரியர் வேல்முருகன், ஆய்வு மாணவர் பிரபு, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கல்வெட்டை ஆய்வு செய்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: பதினாறாம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசர்கிருஷ்ணதேவ மகாராயரின் எட்டாம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை வைத்து பார்க்கும்போது, ஆங்கில ஆண்டு 1517ல் பிப்ரவரி மாதம் பொறிக்கப்பட்டுஉள்ளது.அதில், சந்திர நயினார்என்பவர், கோவிலில் உள்ள செங்கழுநீர் செல்லப் பிள்ளையாருக்கு நாள் படையலுக்காக இவ்வூரில் உள்ள 500 குழி நிலத்தை அவிப்புறமாக வழங்கியது தெரிகிறது. அவிப்புறம் என்பது இறைவனுக்கு தினந்தோறும் நைவேத்யம் எனும் நாள்படையலுக்கு ஆகும் செலவை ஈடு செய்ய விடப்பட்ட நிலக் கொடையாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை