அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
சிதம்பரம் : சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், சிவபுரி அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ' தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்கள் கற்கும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங் கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிதம்பரம் அடுத்த சிவபுரி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் 'தினமலர் - பட்டம ் ' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை தாங்கினார். சாசன தலைவர் யாசின், உதவி ஆசிரியர் திருமுருகன், ரோட்டரி சங்க தலைவர் ஹரிகிருஷ்ணன், செயலாளர் புகழேந்தி, கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். ஆசிரியர் தென்னவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொழிலதிபர் சண்முக சுந்தரம், மாணவ, மாணவிகளுக்கு 'தினமலர் - பட்டம ் ' இதழ் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் கேசவன், புத்தநேசன், சஞ்சீவி, சுப்பையா, பழனியப்பன், கார்த்திகேயன், பன்னாலால், வேதாந்த தேசிகன், பாலமுரளி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை பரமேஸ்வரி நன்றி கூறினார்.