உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., ஆட்சி சாதனை துண்டு பிரசுரம் வழங்கல்

அ.தி.மு.க., ஆட்சி சாதனை துண்டு பிரசுரம் வழங்கல்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் அ.தி.மு.க.,வின் பத்தாண்டு ஆட்சி சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரசாரம் செய்தார். ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், அவைத் தலைவர் செல்வராசு, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாநில துணைச் செயலாளர் அருளழகன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகசிகாமணி, ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் ராஜா சாமிநாதன், பிரித்தவி, ஜெயசீலன், கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர். அரங்கசாமி, செல்வராசு, திருநாவுக்கரசு, பிரகாஷ், மணிகண்டன், கோபி, தொழிற்சங்க நிர்வாகி சரவணன், செங்கோடன், தனசேகரன், இந்திரா கணேசன், சற்குரு, வீரமணி, தங்சாமி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !