உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவிகள் மரக்கன்று வழங்கல்

வேளாண் மாணவிகள் மரக்கன்று வழங்கல்

சிதம்பரம்: மேல் அனுவம்பட்டு கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவிகள் மரக்கன்று வழங்கினர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், மேல் அனுவம்பட்டு கிராமத்தில் மாணவிகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மாணவிகள் சார்பில் கிராமத்தில் மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. மாணவிகளின் குழு தலைவி சவுமியா தலைமை தாங்கினார். துணை தலைவி வித்யாலக்ஷ்மி வரவேற்றார். பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை இணை பேராசிரியர் நடராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி துணை தலைவர் அய்யாசாமி, ஊராட்சி செயலர் சுதாகர் ஆகியோர் கிராம மக்களுக்கு, வேளாண் மாணவிகள் சார்பில் மரக்கன்று வழங்கினர். மாணவிகள் சிவஸ்ரீ, ரா.சிவஸ்ரீ, யோகேஸ்வரி, சோபியா, ரா.சவுமியா, சவுமியா, ஸ்ரீமதி, ஸ்ரீநிதி, ஸ்ரீசக்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை