மாவட்ட கிரிக்கெட் போட்டி; கடலுாரில் 12ல் துவக்கம்
கடலுார்; கடலுார் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் கோப்பைக்கான போட்டி, கடலுாரில் வரும் 12ம் தேதி துவங்குகிறது.கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் அறிக்கை;கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட கிரிக்கெட் சங்க பதிவு அணிகளுக்கான மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் கோப்பை 2024-25 போட்டி நடக்கிறது. கடலுார் மாவட்ட அளவிலான இப்போட்டி வரும் 12ம் தேதி காலை 8:30 மணியளவில் சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமையில் துவங்கி 19ம் தேதி வரை கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது.கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொள்கின்றன. கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி சிதம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து அணிகள் பங்கு பெறுகின்றன. காலை 8:30 மணியளவிலும், மதியம் 12:30 மணியளவிலும் போட்டிகள் நடக்கிறது.