உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு

பண்ருட்டி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு

பண்ருட்டி,: பண்ருட்டி ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.திருச்சி-சென்னை ரயிலில் வந்த அவர், பண்ருட்டி ரயில் நிலைய அடிப்படை வசதிகள் மற்றும் பண்ருட்டி ரயில் நிலைய சாலையை விரைவில் சீரமைக்கவும், மாற்றுவழிச்சாலை ஏற்படுத்துவது, பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஆய்வின்போது பி.ஆர்.டி., ரயில் உபயோகிப்பாளர்கள் நலசங்கம் சார்பில், மன்னார்குடி-திருப்பதி, உழவன் எக்ஸ்பிரஸ் மற்றும் சிறப்பு ரயில்கள் பண்ருட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அப்போது, ரயில்வே துணை வணிக மேலாளர் எழில்மதி பிள்ளைக்கனி, தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மலர்வாசகம், ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் சுபாஷ், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் நரேஷ்சந்த், துணை தலைவர் அருணாசலம், கவுன்சிலர்கள் சோழன், கதிர்காமன், ரோட்டரி சங்க தலைவர் பாலமுருகன், செயலாளர் சுதாமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை