மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு
20-Jul-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை கோட்ட மேலாளர் பாலக்ராம் நெகி ஆய்வு செய்தார். தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளராக புதிதாக பொறுப்பேற்ற பாலக்ராம் நெகி, விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று சிறப்பு ஆய்வு ரயிலில் வந்தார். பின், 9.5 கோடி ரூபாயில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட வசதிகளை பார்வையிட்டார். அப்போது, விரிவுபடுத்தப்பட்ட டிக்கெட் கவுன்டர், சிக்னல் அறைகள், நடைமேடைகள், கழிவறைகள், பயணிகள் ஓய்வறையை ஆய்வு செய்து, பயணிகளிடம் அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலும், எஸ்.ஆர்.எம்.யு., தொழிற்சங்க நிர்வாகிகள் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புகளை கூடுதலாக கட்டித்தர வேண்டும். ரயில்வே திருமண மண்டபத்தில் உணவருந்தும் கூடத்தை விரிவுபடுத்த வேண்டும் என, வலியுறுத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்ட மேலாளர் பாலக்ராம் நெகி உறுதியளித்தார். உதவி கோட்ட மேலாளர் செல்வம், கோட்ட வணிக மேலாளர் ரதிபிரியா, ரயில் நிலைய மேலாளர் சுனில், எஸ்.ஆர்.எம்.யு., கிளை தலைவர் செல்வம், செயலாளர் கணேஷ்குமார், பொருளாளர் வீரகுமார் உடனிருந்தனர். முன்னதாக, நடைமேடை 2ல் புதிதாக கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வறை மற்றும் டிக்கெட் கவுன்டரின் மேல்புறம் உள்ள காத்திருப்பு கூடம் இன்று திறக்கப்பட உள்ளன. இவற்றை கோட்ட மேலாளர் பார்வையிட்டார்.
20-Jul-2025