உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை

சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை

சிதம்பரம்: சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை துவங்கியது.சிதம்பரம். மேல வீதியில் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க நிகழ்ச்சி நடந்தது. மண்டல மேலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். துணை மண்டல மேலாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் ஜம்புலிங்கம் வரவேற்றார். கடலுார் மாவட்ட எஸ்.பி., ராஜாராம், தீபாவளி விற்பனையை குத்து விளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தார்.இங்கு, கோவை மென்பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் பட்டு சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், நெகமம் பருத்தி சேலைகள், மெத்தை, தலையணை, வேட்டி- சட்டை உள்பட பல்வேறு ரகங்கள் உள்ளன.நிகழ்ச்சியில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் ஊழியர்கள் பல உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ