தி.மு.க., முகவர்கள் கூட்டம்
சிதம்பரம்; தி.மு.க.,, சார்பில் பாக முகவர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடந்தது.சிதம்பரம் ஓமகுளம் நந்தனார் மடத்தில், குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு சாவடிகளில், பூத் கமிட்டி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.ஊராட்சி அளவிலான கூட்டத்திற்கு, சிதம்பரம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பாரிபாலன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் முன்னிலை வகித்தார், ஒன்றிய செயலாளர் சங்கர் வரவேற்றார். கூட்டத்தில், தேர்தல் பணிகளை தொடங்கி, தினமும் தங்கள் பகுதி வாக்காளர்களை சந்திக்க வேண்டும், அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் , பரந்தாமன், பொருளாளர் பாலகுரு, அவைத் தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் குபேரன், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சிவராமன் பங்கேற்றனர்.