உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., கூட்டணி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்

தி.மு.க., கூட்டணி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார் . இதில், விஷ்ணுபிரசாத் எம்.பி., அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, சரவணன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் குணசேகரன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூ., மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில், துணை மேயர் தாமரைச்செல்வன், மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் மாநில அமைப்பு செயலாளர் வைபவ் பேசினர். கூட்டத்தில், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன், இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், இளைஞர் அணி அமைப்பாளர் அருள், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், மனோகர், சபாநாயகம், தங்க ஆனந்தன், கலையரசன், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நாளை காலை 10:00 மணிக்கு நடக் கும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி