உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்டுமன்னார்கோவிலில் தி.மு.க.,செயற்குழு கூட்டம்

காட்டுமன்னார்கோவிலில் தி.மு.க.,செயற்குழு கூட்டம்

காட்டுமன்னார்கோவில், அக்.31- கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.,. செயற்குழு கூட்டம் காட்டுமன்னார்கோவில் தனியார் கலையரங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு புகழேந்தி தலைமை தாங்கினார். கடலூர் எம்.எல்.ஏ.,அயப்பன், முன்னாள் எம்.எல்.ஏ .,சரவணன், பொருளாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வாக்குச்சாவடி, முதல்வர் மருத்துவ முகாம், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொகுதி பார்வை யாளர்கள் சுரேஷ்விஜயன், ராமகிருஷ்ணன், சிவா, பாரி, பாலன் மாவட்ட நிர்வாகிகள் ஞானமுத்து, சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, ஜெயபாண்டியன், சிவக்குமார், நாராயணசாமி, தங்கஆனந்தன், கோவிந்தராஜ், செந்தில் குமார், காசிராஜன் சுப்பிரமணியன், தனஜெயன், சபாநாயகம், திருமூர்த்தி, நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகம் தலைகுனியாது, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி, உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !