நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு
கடலுார்; கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளாார்.அவரது அறிக்கை: தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 4,034 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் பா.ஜ., அரசை கண்டித்து கடலுார் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களில் தி.மு.க., சார்பில் நாளை 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகரம் உள்ளிட்ட அனைத்து பகுதி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.