உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நெய்வேலியில் தி.மு.க., பொதுக்கூட்டம்

 நெய்வேலியில் தி.மு.க., பொதுக்கூட்டம்

நெய்வேலி: கடலுார் மேற்கு மாவட்டம், நெய்வேலி தொகுதிக்குட்பட்ட, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் இளைஞர் அணி சார்பில், நெய்வேலி ஆர்கேட் வளாகத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி, 49வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். தொகுதி பார்வையாளர் துரைசாமி, தலைமை பேச்சாளர் கோபிநாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில், தி.மு.க., நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் வீரராமச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், பொருளாளர் ஆனந்த ஜோதி, ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வகுமார் ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி ராமவெங்கடேசன், கோவிந்தராஜ், சீனிவாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், ஆனந்தன், அரசு வழக்கறிஞர் சிலம்பரசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாக்யராஜ் மாவட்ட மருத்துவர் அமைப்பாளர் ராஜேஷ், நெய்வேலி நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி, என்.எல்.சி., - தொ.மு.ச., நிர்வாகிகள்,இளைஞரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ