மேலும் செய்திகள்
வாக்காளர் சேர்க்கை முகாமில் ஆய்வு
17-Nov-2024
கிள்ளை ; கிள்ளை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று நடந்த வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் புதிய வாக்காளர்களை சேர்த்தல் முகாமில், தி.மு.க.,வினர் புதிய வாக்காளர்களை சேர்த்தனர்.கிள்ளை அடுத்த தில்லை விடங்கன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமில், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் தலைமையில், நிர்வாகிகள் புதிய வாக்காளர்களை சேர்த்தனர்.நிகழ்ச்சியில், கிள்ளை மீனவர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் நீதிமணி, சுபாகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
17-Nov-2024