உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மைதானத்தில் நாய்கள் தொல்லை சிறுவர், சிறுமியர் அச்சத்துடன் பயிற்சி

மைதானத்தில் நாய்கள் தொல்லை சிறுவர், சிறுமியர் அச்சத்துடன் பயிற்சி

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஏராளமான நாய்கள் வட்டமிடுவதால் சிறுவர் சிறுமியர் அச்சத்துடன் விளையாடி வருகின்றனர். கடலுார் மாவட்டத்திலேயே அண்ணா விளையாட்டரங்கம் மிக பெரிய அரங்கமாக திகழ்ந்து வருகிறது. இதில் கால்பந்து, வாலிபால், கைப்பந்து, ஓட்டம், இன்டோர் விளையாட்டுகள் என ஏராளமான விளயைாட்டுகளுக்காக தினமும் மாணவ மாணவியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இது தவிர தினமும் காலை,மாலையில் நடைபயிற்சி பெறுவோர் ஏராளம். இவ்வளவு பேர் பயிற்சி பெறும் இந்த அரங்கினுள் ஏராளமான நாய்கள் வட்டமடித்து வருகின்றன. தற்போது நாய்களில் இருந்து ரேபிஸ் பரவி வருவதை தடுப்பதற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இருக்கும்போது கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பள்ளி மாணவ மாணவியர்கள் நாய்களும் சேர்ந்து விளையாடுவதால் அச்சத்துடனேயே விளையாட வேண்டிய சூழல் உள்ளது. எனவே அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை