உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூங்குணம் ஊராட்சியில் திட்டமிடல் இன்றி வடிகால்

பூங்குணம் ஊராட்சியில் திட்டமிடல் இன்றி வடிகால்

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஊராட்சியில், சரியான திட்டமிடல் இன்றி வடிகால் அமைக்கப்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஊராட்சி கம்பன் நகரில், 15வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் 300 மீட்டர் நீளத்தில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 4.05 லட்சம் மதிப்பில் சிமெண்ட், ஜல்லிகளால், கம்பிகள் இல்லாமல்் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வடிகால் குறிப்பிட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகாலில் வந்து நிற்கும். ஆனால் வெளியே வழியில்லாமல் பாதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வடிகாலில் விட்டவுடன் கழிவுநீர் வெளியே வழியில்லாமல் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் திட்டமிடல் இல்லாமல் வடிகால் அமைப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு தான் ஏற்படுகிறது. இதனை உயரதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !