உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு  

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு  

கடலுார் : கடலுார் தபால் நிலையம் அருகில் கருடா மதுபோதை மற்றும் மனநல மையம் சார்பில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். கருடா மது போதை மற்றும் மனநல சிகிச்சை மைய நிறுவனர் சுதர்சனா முன்னிலை வகித்தார். மறுவாழ்வு மையத்தில் இருந்து குணமடைந்தவர்கள் செய்த உணவு பண்டங்கள், கைவினைப் பொருட்கள் ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது. மதுபோதை தொடர்பான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ