உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில், கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர்கள் அங்கையற்கன்னி, விஜயன், ராமகிருஷ்ணன், சுரேஷ்,சிவா, பாரிபாலன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானமுத்து, சக்திவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் பேசினார். வரும் 17ம் தேதி கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில், கடலுார் கிழக்கு மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்பது. ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, சிவக்குமார், ஜெயபாண்டியன், நாராயணசாமி, தங்க ஆனந்தன், ராயர், கோவிந்தராஜ், செந்தில்குமார், காசிராஜன், சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், ஜேம்ஸ் விஜயராகவன், இளைஞரணி கார்த்திகேயன், இன்ஜினியர் அப்பு சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ