உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு

கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் யாசின் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்குகல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.நடுவீரப்பட்டு, சி.என்.பாளையத்தில் உள்ள யாசின் அறக்கட்டளை சார்பில் சிதம்பரம் அருகில் உள்ள சிங்காரக்குப்பம் இருளர் குடியிருப்பில் உள்ள மாணவர்களுக்கு இலவச டியூஷன் சென்டர் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் சிராஜூதின் தலைமை தாங்கினார். நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தணிகாசலம் மாணவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து பேசினர்.நிகழ்ச்சியில் இருளர் கிராம தலைவர் அருள், டியூஷன் ஆசிரியை மதினா, அறக்கட்டளை உறுப்பினர்கள் முபாரக், இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !