மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: முதியவர் கைது
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.சிறுபாக்கம் அருகே கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண். மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர், தனது குடும்பத்துடன் வசித்து, கால்நடைகளை மேய்க்கும் தொழிலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டதால் கழுதூர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், பெண் 6 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறினார். இதனையறிந்த சிறுபாக்கம் போலீசார் விசாரித்ததில், சிறுபாக்கம் அடுத்த கச்சிமயிலுாரை சேர்ந்த வெள்ளையன், 65, என்பவர், பலாத்காரம் செய்தது தெரியவந்தது.இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, வெள்ளையனை கைது செய்தனர்.