மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சாவு
01-Apr-2025
விருத்தாசலம் : சாலையின் நடுவே காரை நிறுத்திய டிரைவர் கதவை திறந்ததால், அதில் அடிப்பட்டு பைக்கில் வந்த முதியவர் இறந்தார். விருத்தாசலம் அடுத்த காட்டுப்பரூர் ஆராவமுது,70; ஆதிகேசவ பெருமாள் கோவில் தர்மகர்த்தா. நேற்று காலை 10:45 மணிக்கு, விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பஸ் நிலையம் அருகே சாலையின் குறுக்கே நின்றிருந்த காரில் இருந்து டிரைவர் திடீரென கதவை திறந்தபோது, ஆராவமுது கார் கதவில் மோதி கீழே விழுந்தார்.படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
01-Apr-2025