மேலும் செய்திகள்
ஆற்றில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை
18-Sep-2026
கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கடலுார் சில்வர் பீச்சில் நேற்று ஏராளமானோர் மகாளய அமாவாசையொட்டி புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். அப்போது, 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த தேவனாம்பட்டிணம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எபட்டி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
18-Sep-2026