உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தேர்தல் விழிப்புணர்வு இசைத்தட்டு வெளியீடு 

 தேர்தல் விழிப்புணர்வு இசைத்தட்டு வெளியீடு 

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 100 சதவீதம் ஓட்டுபதிவினை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. அதில், தேர்தல் விழிப்புணர்வு பாடல் இசைத்தட்டினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டு, நுாறு சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி துாய்மை காவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி துவக்கி வைத்தார். இப்பேரணி அண்ணா விளையாட்டரங்கம் துவங்கி கடலுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை சென்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, கடலுார் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி