உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பகலில் எரியும் மின் விளக்குகள்; அரசு நடவடிக்கை தேவை

பகலில் எரியும் மின் விளக்குகள்; அரசு நடவடிக்கை தேவை

கடலுார்; கடலுார் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மின் விளக்குகள் பகலிலும் எரிவதால் அரசுக்கு கூடுதல் மின் கட்டண இழப்பு ஏற்படுகிறது. கடலுார் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் மின்சார செலவை குறைப்பதற்காக எல்.இ.டி., பல்பு தெருவிளக்குக்காக போடப்படுகிறது. ஊராட்சி தலைவர்கள் பதவியில் இருந்த வரை காலையில் மின்விளக்குகள் நிறுத்தப்பட்டது. ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த உடன் ஊராட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள அந்தந்த பி.டி.ஓ., க்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களால் எதையும் கவனிக்க முடியவில்லை. ஊராட்சி செயலரை நம்பி உள்ளனர். கடலுார் ஒன்றியத்தில் பல இடங்களில் மின் விளக்குகள் நிறுத்துவதே இல்லை. இரவு பகலாக எரிகிறது. மின் செலவை குறைக்கதான் எல்.இ,டி., பல்புகளை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பகலிலும் விளக்கு எரிவதால் கிடைக்கக்கூடிய மின்சிக்கனம் கிடைக்காமல் போய் விடுகிறது. குறிப்பாக, பெண்ணையாற்று பழைய பாலம், சுபா உப்பலவாடி, மலைக் கிராமங்கள் போன்றவற்றில் எப்போதும் தெருவிளக்குகள் எரிந்த வண்ணம் உள்ளது. கூடுதல் கலெக்டர் ஒரு நாள் காலையில் கிராமப்பகுதியில் திடீர் விசிட் செய்து நடவடிக்கை எடுத்தால்தான் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !