உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் நுகர்வோர் குறைதீர்வு முகாம்

மின் நுகர்வோர் குறைதீர்வு முகாம்

விருத்தாசலம்: விருத்தாசலம் மின்துறை கோட்ட அலுவலகத்தில் இன்று குறைதீர்வு முகாம் நடக்கிறது என கோட்ட செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விருத்தாசலம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், மாதந்தோறும் இரண்டாவது வியாழக்கிழமைமின்நுகர்வோர் குறைதீர்வு முகாம் நடக்கிறது. அதன்படி, விருத்தாசலம் கோட்ட அலுவலகத்தில், இன்று (11ம் தேதி) காலை 11:00 மணி முதல் பகல்1:00 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில், விருத்தாசலம் கோட்ட அலுவலகத்தை சேர்ந்த உட் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள்,மின்துறை சம்பந்தமாக குறைகளை நேரில் கூறி, நிவர்த்தி பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ