வேலைவாய்ப்பு முகாம்
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 320 மாணவர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டது. விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் அன்புக்குமரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஜாகிர்உசேன் வரவேற்றார். பேராசிரியர் பரமசிவம் தொகுத்து வழங்கினார். நகராட்சித் தலைவர் சங்கவி முருகதாஸ், வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணியாணை வழங்கினார். மாவட்ட ஆளுனர் லியோன், உதவி ஆளுனர் அசோக்குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். அதில், 110 தனியார் நிறுவனங்கள் சார்பில் முகாமில் பங்கேற்ற 512 மாணவர்களில், 320 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.