தொழிலாளி குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை
கடலுார் : பணியின் போது இறந்த ஊழியர் குடும்பத்திற்கு, இ.எஸ்.ஐ.,சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.கடலுார் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஆப்பரேட்டராக பணிபுரிந்தவர் வீரச்செல்வன்,32. இவர் கடந்த 2024ம் ஆண்டு வீட்டில் இருந்து பணிக்கு செல்லும் போது, சாலை விபத்தில் உயிரிழந்தார்.தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின், காப்பீட்டு தொழிலாளியான வீர்ச்செல்வன் பணியின் போது இறந்ததால் உதவித்தொகை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. சென்னை கே.கே.நகர் மருத்துவமனை டாக்டர் கிரண்லால், இ.எஸ்.ஐ., கிளை கடலுார் மேலாளர் லுார்துசாமி ஆகியோர் வீரச்செல்வனின் மனைவி பிரபாவதியிடம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை நேற்று வழங்கினர். மனைவி பிரபாவதி, மகள் சாய் திகழினியா இருவருக்கும் மொத்தமாக 90 ஆயிரத்து 560ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தினசரி 566 ரூபாய் வீதம், மாதந்தோறும் இருவரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.