லட்சுமி சோரடியா பள்ளியில் கண்காட்சி
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கடலுார் எஸ்.எஸ்.ஆர்., நகர் லட்சுமி சோரடியா பள்ளியில் எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 'லீட் ஸ்டார்ட் கரிக்குலம்' சார்பில் ஸ்டூடண்ட் லீட் கான்ப்ரன்ஸ் என்ற தலைப்பில் கண்காட்சி நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று அறிவியல் சார்ந்த படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். லீட் நிர்வாகத்தின் சார்பில் அதன் இயக்குனர், பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா உட்பட பலர் கணகாட்சியில் வைக்கப்பட்டிருந்த படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.