வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது போன்று அரசு பள்ளிகள் பின் பற்றினால் நாம் முன்னேற எதிர் காலம் வளமாகுமே? நல்ல செய்திக்கு தினமலரருக்கு நன்றி.
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கான கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினராக பல்லவா சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் ஸ்ரீதேவி பங்கேற்றார். இந்த கல்வியாண்டில் கடந்த 6 மாதங்களில், மழலையர்கள் பயின்றதை கண்காட்சியில் காட்சிக்காக வைத்திருந்தனர். விமான நிலையம், மருத்துவமனை, உணவகம், தீயணைப்பு நிலையங்கள் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.
இது போன்று அரசு பள்ளிகள் பின் பற்றினால் நாம் முன்னேற எதிர் காலம் வளமாகுமே? நல்ல செய்திக்கு தினமலரருக்கு நன்றி.