உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண் சிகிச்சை முகாம்  

கண் சிகிச்சை முகாம்  

புவனகிரி : புவனகிரியில் பா.ஜ., மற்றும் மாவட்ட அரசு கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் அர்ச்சனா ஈஸ்வர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருமாவளவன், முன்னாள் துணைத் தலைவர் வெற்றிவேல், ஒன்றிய தலைவர் லட்சுமி நரசிம்மன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொதுச் செயலாளர் பழனியப்பன் வரவேற்றார். அகத்தியம் பவுண்டேஷன் நிர்வாகி ஈஸ்வர் ராஜலிங்கம் முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட அரசு கண் மருத்துவ குழு திட்ட மேலாளர் டாக்டர் சங்கீதா தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சியில், மாநில செயற்குழு ஸ்ரீதரன், நிர்வாகிகள் விஜயரங்கன், மாலா, தியாகு, ஏழுமலை, ஜோதி நடராஜன், வெங்கடேசன், ராமநாதன், ராமதாஸ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை